வாக்காளர்களுக்கு பரிசாக மரக்கன்று..! அசத்தும் விழுப்புரம் எம்.பி..!

மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆகியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கடந்த ஒரு 2 நாட்களாக பல கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். செல்லும்போது கூடவே ஒரு வேனில் மரக்கன்றுகளையும் ஏற்றிச்சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு மரக்கன்றுகளை பரிசாக அளிக்கிறார் ரவிக்குமார் எம்.பி. தொகுதியை பசுமையாக்க வேண்டும் என்ற ரவிக்குமாரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்து மரக்கன்றுகளை நட்டு வைக்க ஊக்கப்படுத்தியதுடன் ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொகுதி முழுவதும் விநியோகித்து அதனை பராமரித்து வளர்க்குமாறு வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் அன்புக்கட்டளை போடுகிறார் ரவிக்குமார்.

எல்லா எம்.பி.க்களும் தன்னை சந்திக்க வருபவவர்களிடம் இருந்து சால்வை, மாலை என வாங்கி வரும் நிலையில், தன்னை சந்திக்கிறவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக அளித்து அசத்துகிறார் வி.சி.க.வின் ரவிக்குமார் எம்.பி.

More News >>