சுவையான பிரட் உப்புமா ரெசிபி

சுவையான பிரட் உப்புமா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 5

நறுக்கிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

ரவை - கால் கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

லெமன் - 1

கறிவேப்பிலை

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், பிரட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். கூடவே, மஞ்சள் தூள் சேர்க்கவோ.

தொடர்ந்து, ரவையுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.பின்னர், பிரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இறுதியாக, எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பிரட் உப்புமா ரெடி..!

More News >>