இதுக்காக மட்டும் கோவா வருகிறீர்களா?- சட்டம் கடுமையாகும் என முதல்வர் எச்சரிக்கை

கோவாவில் மது மற்றும் போதைப் பொருள்களை மட்டும் தேடி வருவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவாவின் முன்னேற்றம் குறித்து அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் மிகவும் வேதனையுடன் பேசினார். அவர் கூறுகையில், "கோவாவில் உள்ள இளைஞர்கள் பலரும் கடுமையாக உழைப்பதற்குத் தயாராகவே இல்லை. இளைஞர்கள் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். போதைப் பொருள் வர்த்தகம்தான் அதிகப்படியாக நடக்கும் தொழில் ஆக உள்ளது வேதனையளிக்கிறது" என்றார்.

மேலும் அம்மாநில வளர்ச்சி மேம்பாடு குறித்து பேசுகையில், "கோவாவில் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த உள்ளோம். கடத்தல்களைக் குறைக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மது மற்றும் இதர போதைப் பொருள்களுக்காக மட்டும் கோவாவைத் தேடி வருவது வருத்தமளிக்கிறது. குறிப்பாகப் பெண்களும் மது அருந்தத் தொடங்கியுள்ளது வேதனை அளிப்பதாகவே உள்ளது" என்றார்.

 

More News >>