மரியாதையா பேசுங்க வடிவேலு சீறிய சுசீந்திரன்
இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷங்கர் குறித்து ஒருமையில் பேசிய வடிவேலுவுக்கு இயக்குநர் சுசீந்திரன் தனது வன்மையான கண்டனத்தை கடிதம் மூலம் பதிவு செய்துள்ளார்.
ஹேஷ்டேக் Save_For_Nesamani உலகளவில் டிரெண்டான நிலையில், நடிகர் வடிவேலுவிடம் தனியார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய நடிகர் வடிவேலு, 23ம் புலிகேசி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் குறித்தும், அந்த படத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் குறித்தும் அவன், இவன் என பேசியுள்ளார்.
இதனை பலரும் கண்டுகொள்ளாத நிலையில், வெண்ணிலா கபடி குழு, ராஜபாட்டை, ஜீனியஸ், கென்னடி கிளப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சுசீந்திரன், வடிவேலுவின் இந்த மரியாதை குறைவான பேச்சுக்கு தனது வன்மையான கண்டனத்தை கடிதம் மூலமாக தெரிவித்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது பகிரங்க எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மேலும், 23ம் புலிகேசி படத்திற்கு பிறகு வெளியான இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலி ராமன், எலி படங்கள் படுதோல்வியை சந்தித்ததற்கும் வடிவேலுவின் தலையீடே காரணம் என வடிவேலுவை டோட்டல் டேமேஜ் செய்து அந்த கடிதத்தை பதிவிட்டுள்ளார் சுசீந்திரன்.