மொத்த யூடியூபர் ரசிகர்களையும் கவர்ந்த இன்டெர்நெட் பசங்க!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் இடம்பெற்றுள்ள இன்டெர்நெட் பசங்க பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வரும் வெள்ளிக்கிழமை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பிளாக்‌ஷிப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார். சன் மியூசிக் வீஜேவாக இருந்து சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணனாக நடித்த ரியோ ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.

மேலும், யூடியூப் டீம் உருவாக்கியுள்ள படம் என்பதால், படத்தின் இன்ட்ரோ பாடலான இன்டெர்நெட் பசங்க பாடலில், பிளாக்‌ஷிப், பரிதாபங்கள், மைக்செட், சோதனைகள், ஆவ்சம் மச்சி, இட்டிஸ் பிரசாந்த், செல்ஃபி ரிவ்யூ கார்த்தி, மதன் கெளரி என யூடியூப் பிரபலங்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாக இருப்பதால், படத்தை புரமோட் செய்யும் விதமாக கச்சிதமாக இந்த பாடலை படக்குழுவினர் இறக்கியுள்ளனர்.

அத்தனை யூடியூப் ரசிகர்களும் படத்தை வந்து பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தில் பல யூடியூபர்கள் நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜம்ப்கட்ஸ் ஹரி பாஸ்கர், எருமை சாணி விஜய் ஹரிஜா என சில பிரபலங்கள் இந்த பாடலில் மிஸ் ஆனது குறித்தும் ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

More News >>