ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி... வாக்காளர்களுக்கு நன்றி
ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உ.பி.மாநிலத்தில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்தாலும் அமேதியில் ராகுல் காந்தி, ரேபரேலியில் சோனியா காந்தியும் அமோகமாக வெற்றி பெறுவது கடந்த சில தேர்தல்களில் வாடிக்கையாள ஒன்று. இந்த முறையும் அதே போன்று வெற்றி பெறுவார்கள் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் அமேதியில் ராகுல் காந்தி அதிர்ச்சி தோல்வியடைந்தார். உ.பி.மாநிலத்தில் காங்கிரசுக்கு ஒண்ணே ஒண்ணு என்ற ரீதியில் சோனியா மட்டும் ரேபரேலியில் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா காந்தி இன்று ரேபரேலி சென்றார். பிரியங்கா காந்தியுடன் ரேபரேலி சென்ற சோனியாகாந்தியை விமான நிலையத்தில் கட்சி தொண்டர்க நம் நிர்வாகிகளும் உற்சாகமாக வரவேற்றனர். இன்று மாலை ரேபரேலியில் கட்சித் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாவும், பிரியங்காவும் பங்கேற்கின்றனர். பின்னர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்காளர்களுக்கு சோனியா காந்தி நன்றி தெரிவிக்கிறார்.