அருமையான சுவையில் மாம்பழ கேசரி ரெசிபி
அருமையான சுவையில் மாம்பழ கேசரி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நெய் - ஒரு கப்
முந்திரி - 10
ரவை - ஒரு கப்
மாம்பழம் - 2 கப்
சர்க்கரை - அரை கப்
ஏலத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில் நெய்விட்டு ரவையை வறுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் ஒன்றரை தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு, வறுத்த ரவையை சேர்த்து கிளறி வேகவிடவும். தொடர்ந்து, மாம்பழ கூழ், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
ரவையும், மாம்பழமும் வெந்து கெட்டியாக ஆனதும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான.. மாம்பழ கேசரி ரெடி.!