அனைவரும் விரும்பும் மாம்பழ பாசுந்தி ரெசிபி
சுவையான மாம்பழ பாசுந்தி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பால் - ஒரு கப்
பால் கோவா - கால் கப்
கண்டென்ஸ்ட் பால் - அரை டின்
மாம்பழம் கூழ் - ஒன்றரை கப்
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலத்தூள்
நட்ஸ்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும். கூடவே, பால் கோவா, கண்டென்ஸ்ட் பால் சேர்த்து கிளறி பாலை சுண்ட வைக்கவும்.
பால் சுண்டியதும், மாம்பழ கூழ் சேர்த்து நன்றாக கிளறவும்.
கூடவே, குங்குமப்பூ, ஏலத்தூள் சேர்த்து கிளறி ஆறியதும் பொடித்த நட்ஸ் தூவி பிரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறவும்.
சுவையான.. மாம்பழ பாசுந்தி ரெடி..!