தம்பிகளுக்கு சீமான் போட்ட உத்தரவு..? சுற்றி சுழலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..!

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் உற்சாகமாக உள்ளார்.

பிரதனா கட்சிகளான திமுக, அதிமுகவே சீமானுக்கு தமிழகத்தில் இப்படியொரு செல்வாக்கு இருக்கிறதா என்று வியந்துபோய் இருக்கிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்பதால் இப்போதே அதற்கான அடிமட்ட பணிகளை சீமான் தொடங்கிவிட்டார்.

அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசிய சீமான், உள்ளூர் பிரச்சனைகள் குறித்து மனு தயார் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என தனது தம்பிகளுக்கு அன்புக்கட்டளை போட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிராம அளவில் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து லிஸ்ட் தயார் செய்து வருகிறார்கள்.

மேலும் குழுவாக பிரிந்து கிராமங்களுக்கு செல்லவும் தொடங்கியிருக்கிறார்கள். சீமான் செல்லும் வேகத்தை பார்த்தால் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக, அதிமுகவுக்கு மிக கடும் போட்டியை தருவார் போல் உள்ளது. பொதுவாக சீமான் உள்ளூர் பிரச்சனையை விடுத்து இலங்கையை பற்றி தான் (ஈழத்தமிழர் விவகாரம் ) அதிகம் பேசுவார், அவருக்கு உள்ளூர் பிரச்சனைகளை பற்றி கவலையில்லை என எதிர்தரப்பினர் பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில் அதை தவிடுபொடியாக்கி உள்ளூர் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

-தமிழ் 

More News >>