மோடிக்கு வாழ்த்துக் கூறிய சீன அதிபர்..! இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி பேச்சு..!

கிர்கிஸ்தானில் நடைபெறும் 2 நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சீனா, உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன.

இந்நிலையில் மாநாட்டுக்கு இடையே மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மலர்ந்த முகத்துடன் கைக்குலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு டோக்லாம் எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் நிலவியது.

பின்னர் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசிய பின் பதற்றம் தணிந்தது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின்னர் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியா- சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இருநாட்டு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிர்கிஸ்தான் அதிபர் சுரன்பே உள்ளிட்டோரையும் மோடி சந்திக்கிறார். அதே சமயம் அங்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மோடி சந்திக்க மாட்டார் என கூறப்படுகிறது. 

-தமிழ் 

More News >>