சர்க்கரை சேர்க்காமல் பசும்பால் அருந்துங்கள்
'பால்' ஊட்டச்சத்துகள் நிரம்பியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பால் அருந்தினால் உடல் எடை கூடும் என நினைத்து பலர் பாலை தவிர்த்து விடுகின்றனர். பால் குறித்த சில தகவல் குறிப்புகள்:
என்னென்ன சத்துகள்?
ஒரு குவளை, அதாவது 250 மில்லி லிட்டர் (கால் லிட்டர்) பாலில் 285 மில்லி கிராம் கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. ஒரு நாளில் பெரியவர்களுக்கு 1,000 முதல் 1,200 மில்லி கிராம் கால்சியம் தேவை என்று கூறப்படுகிறது. அப்படியானால் நமக்குத் தேவையான கால்சியத்தில் 22 முதல் 29 விழுக்காடு ஒரு குவளை பாலிலேயே கிடைக்கிறது. இரண்டு அல்லது மூன்று குவளை பால் அருந்தினால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்து விடும். ஒரு நாளைக்கு இருமுறை பால் அருந்தலாம்.
பாலும் உடல் எடையும்
பால் அருந்தினால் உடல் எடை கூடும் என எண்ணி பலர் பால் அருந்துவதை தவிர்க்கிறார்கள். அது தவறான நம்பிக்கை. படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வரைக்கும் பால் அருந்தலாம். சாப்பிட்ட உடன் மற்றும் படுக்கைக்குச் செல்லும்போது பால் அருந்தினால் உடல் எடை கூட வாய்ப்புள்ளது.
நீரிழிவு பாதிப்பும் பாலும்
சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பாதிப்புள்ளோரும் பால் பருகலாம். அனைவருமே சர்க்கரை சேர்க்காமல் பால் அருந்துவது நலம். லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பசும்பாலுக்குப் பதிலாக தேங்காய் பால், பாதாம் பால் அருந்தலாம்.
ஏனைய நன்மைகள்
பாலில் பாஸ்பரஸ், பி12 வைட்டமின் மற்றும் புரதம் ஆகியவையும் உள்ளன. 240 மில்லி லிட்டர் பாலில் ஒரு கிராம் புரதம் உள்ளது. ஆல்பா லாக்டாஅல்புமின், லாக்டோகுளோபுளுலின், செரம் அல்புமின், இம்யூனோகுளுபுளுலின் போன்றவை அடங்கிய புரதங்களின் கலவை (Whey Protein) பாலில் கிடைக்கிறது. இந்தப் புரதத்திற்கு இரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது.
நாடு முழுவதும் வெப்பக் காற்று அனலில் தகிக்கும் சென்னை