ரஜினி படத்தின் இயக்குநருக்கு தமிழிசை எச்சரிக்கை..! விளம்பரத்துக்காக பேசக்கூடாது என சாடல்..!
ராஜராஜ சோழன் பற்றி இயக்குநர் ரஞ்சித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது பலரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இயக்குநர் ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் திரைப்படம் விளம்பரத்துக்காக பேசுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியிள்ளார்.
மேலும் 2 திரைப்படம் எடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுவதாகவும் விமர்சித்துள்ளார். பட்டியல் இன மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு ரஞ்சித் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக தமிழிசை சாடியுள்ளார்.
ராஜராஜசோழன் எல்லோரும் மதிக்கும் மன்னன் என்றும், வரலாற்றை திரித்து கூறிவது நாகரீகமற்ற செயல் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். இதனிடையே ரஞ்சித்தின் கருத்துக்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டத்தை பதிவு செய்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 19 வரை ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்துள்ளது..
திடீரென நேர்கொண்ட பார்வை டிரைலர் அறிவிப்பு ஏன் தெரியுமா?