வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்..! தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில் பல இடங்களில் தண்ணீருக்காக மோதலில் ஈடுபடுகின்றனர் மக்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். அமைச்சர்கள் வீடுகளுக்கு மட்டும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைப்பதாகவும், மக்கள் நீரின்றி தவிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணமே தமிழக அரசு தான் என்றும், நீர்நிலைகளை முறையாக தூர்வாரியிருந்தால் தண்ணீருக்காக மக்கள் திண்டாட வேண்டிய நிலை வந்திருக்காது எனவும் கூறியுள்ளார்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பிரச்சனையை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களை பற்றி சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். இதனிடையே நீட் தொடர்பாக பேசிய அவர், தேவையில்லாத ஒரு தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி.

-தமிழ் 

காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் 24ல் மீண்டும் கூடுகிறது
More News >>