பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம் 17ம் தேதி அரசு ஆய்வு

அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று(ஜூன் 15) நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் தண்ணீர் இல்லாததால் விடுமுறை விடப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். பள்ளிகளில் குழாய்களில் தண்ணீர் வராவிட்டால், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து தண்ணீர் வாங்கி்க் கொள்ளலாம் என்று கல்வித் துறை உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், வரும் 17ம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே சென்னையில்தான் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது. தண்ணீர் ஏற்பாடு செய்ய முடியாததால், ஓட்டல்களில் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்தியிருக்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளில் பணியாற்றுவோர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறார்கள்.

இதே போல், தனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாமல் சனிக்கிழமை விடப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் தண்ணீர் இல்லை என்றாலும் மாணவர்கள் அவதிப்பட்டாலும், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிின்றன. சில பள்ளிகளில் மட்டும் தலைமை ஆசிரியர்கள், லாரிகளில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்திருக்கிறாா்கள். எனவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி மாற்று ஏற்பாடுகளை செய்தால் அது மாணவர்களையும், ஆசிரியர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும்.

'வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்'..! தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..!
More News >>