தனுஷின் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர் டீசர் ரிலீஸ் (வீடியோ)

தமிழ், ஹிந்தியை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தனது நடிப்பு திறமையால் கலக்கி வருகிறார் தனுஷ்.

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர்’ என்ற படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ள தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில், பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் கால தாமதமானது. தற்போது, அனைத்து பிரச்னைகளும் முடிந்த நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர்’ டீசர் இதோ..

More News >>