குடிமராமத்துப்பணி பற்றி வெள்ளை அறிக்கை தேவை- டி.டி.வி.தினகரன் அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு; குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த இரண்டாண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், கடுமையான குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை திசை திருப்புவதற்காக புதிதாக ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாக பழனிச்சாமி அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் மக்கள் தவியாய் தவிக்கும் போது, அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், மக்களைத் திசை திருப்ப இது போன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில், என்னென்ன பணிகள் நடைபற்றுக்கொண்டிருக்கின்றன என்ற பட்டியலை மாவட்டவாாியாக வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

-தமிழ் 

எதிர்வீட்டு பெண்ணை தாக்கிய சபாநாயகரின் டிரைவர் கைது தண்ணீர் பஞ்சம் படுத்தும்பாடு
More News >>