சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி
சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி எப்பி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வெள்ளை சாதம் - 2 கப்
வேர்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லித்தழை
கறிவேப்பிலை
நெய்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். கூடவே, எள் சேர்த்து வறுப்பட்டதும் ஆறவைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்தது பொரித்ததும், வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், வெள்ளை சாதத்தை அத்துடன் சேர்த்து கிளறவும்.பின்னர், அரைத்து வைத்த பொடி, கொத்தமல்லித்தழை, நெய், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான வேர்கடலை சாதம் ரெடி..!