ldquoநான் படங்களைத் தேடி ஓடுபவன் அல்லrdquo: மனம் திறக்கும் ஷாருக்
"என் சினிமா வாழ்க்கைப் பயணத்தில் இதுவரையில் நான் படங்களைத் தேடி ஓடியதே இல்லை" என மனம் திறந்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.
பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தனது சினிமா கால அனுபவத்தைத் தனது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக சினிமாத் துறையில் இருந்து வருகிறேன். இதுவரையில் எந்தவொரு படத்தையும் நான் தேடிச் சென்றதே இல்லை. உண்மையில் நான் ஒரு படத்தைத் தேர்வு செய்து நடித்தேன் என்று கூறுவதைவிட ஒரு திரைப்படம்தான் என்னைத் தேர்வு செய்கிறது என்றே சொல்லாம்" என்றார்.
மேலும் தனது வெற்றி குறித்துக் கூறுகையில், "உண்மையில் எனது அப்பா ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர். நான் ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டு விளையாடியும் உள்ளேன். 'சக் தே' திரைப்படத்துக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பலரும் எதிர்மறை விமர்சனமே கூறினர். ஒரு திரைப்படத்தில் கதாநாயகி இல்லை. முன்பின் அறிமுகமில்லாத சிறு பெண்கள், தாடியுடன் சோக கீதம் பாடும் என் முகம் என அனைத்தையும் எதிர்மறையாகவே விமர்சித்தார்கள். ஆனால், அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. அதுதான். ஒரு திரைப்படம் நம்மைத் தேர்வு செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.