ஒடிசா, குஜராத், பீகாரில் ஜூலை 5ல் ராஜ்யசபா தேர்தல்

ஒடிசா உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும்.ஒடிசாவில் 3 இடங்களும், குஜராத்தில் 2, பீகாரில் ஒரு இடமுமாக 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகி உள்ளன.

 

குஜராத்தில் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். அமித்ஷா, காந்திநகர் தொகுதியிலும், ஸ்மிருதி, அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து, குஜராத்தில் 2 ராஜ்யசபா இடங்கள் காலியாகின.

பீகாரில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் அந்த ராஜ்யசபா உறுப்பினர் இடம் காலியானது. ஒடிசாவில் பிஜுஜனதா தளத்தைச் சேர்ந்த அச்சுதானந்த சமந்தா, லோக்சபா தேர்தலில் வென்றுள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த பிரதாப் கேசரி தேவ், சவுமியா ரஞ்சன் பட்நாயக் ஆகியோர் சட்டசபைத் தேர்தலில் வென்றுள்ளனர். இந்த 3 ராஜ்யசபா தேர்தல் இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 6 இடங்களுக்குத் ஜூலை 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று முதல் 25ம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

 

ஸ்டாலின் சிங்கப்பூருக்கு திடீர் பயணம்

More News >>