மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களை வேட்டையாடும் பணியில் என்ஜஏ அதிகாரிகள் மும்முரமாகிள்ளனர்.கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் இன்று 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், ஐஎஸ் தீவிரவாதிகளின் கோர முகத்தை வெளிச்சம் காட்டியது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஆஸ்மியுடன் தமிழகத்தில் உள்ள சில அமைப்பினர் தொடர்பில் இருப்பது விசாரனையில் தெரிய வந்தது. சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாளர்களை திரட்டி வந்த அமைப்புகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு கோவையில் அதிரடி சோதனை நடத்தினர். 8 இடங்களில் நடத்திய சோதனையில் முகமது அசாருதீன் என்பவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 3 இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் வில்லாபுரத்தைச் சேர்ந்த சதக் அப்துல்லா என்பவனை பிடித்து ரகசிய இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் ஐஎஸ் ஆதரவாளர்களை தொடர்ந்து வேட்டையாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்பா?-கோவையில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு