உலகக் கோப்பை கிரிக்கெட் கருணை காட்டிய மழை.. பாக்.குக்கு எதிராக இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலல் பேட்டிங் செய்து வருகிறது.

 

உலகக் கோப்பை தொடரில் அனல் பறக்கும் போட்டியாக கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் துவங்கியுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்குமோ? என்ற அச்சம் நிலவிய நிலையில் இன்று காலை இல்லாததால் மைதானம் போட்டிக்கு தயாரானது. ஆனாலும் ஆட்டத்தின் பின் பாதியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என வானிலை நிலவரம் கூறப்படுவதால் இந்தப் போட்டியில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனெனில் முதலில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாகவும், பின்பாதி ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போட்டியில் திட்டமிட்டபடி சரியான நேரத்துக்கு போடப்பட் Uது. டாஸை வென்ற பாக்.கேப்டன் சர்ப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் ஓய்வெடுப்பதால், ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் ஓபனிங் இறங்கியுள்ளார். இதனால் தமிழக வீரர் விஜய்சங்கருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு 4-வது வீரராக பேட்டிங்கில் களமிறங்க உள்ளார்.

பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் இந்தப் போட்டியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துமா? அல்லது உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை இதுவரை வென்றதில்லை என்ற மோசமான சாதனைக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்குமா ? என்ற பெரும் எதிர்பார்ப்பை இரு நாட்டு ரசிகர்களிடையே இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது.

More News >>