பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்வி , இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தது. 30 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த தேர்வுக்கு பிறகு, பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்த நான்கு பிரிவில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது.

மற்ற மூன்று பிரிவினருக்கும் வழக்கு நிலுவையில் இல்லாத நிலையிலும் கூட, தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கவில்லை.

இந்நிலையில் சிறப்பாசிரியர்கள்( தையல், ஓவியம், இசை ஆசிரியர்கள்) 100 பேர் தங்களுக்கு பணி நியமன ஆணை தரக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளத்து. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. .

சச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு
More News >>