வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே
வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தின் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப நிலையைப் பொறுத்த வரை சென்னை,திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலுர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும் என்றும், ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை குறைக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பமானது அதிகரிக்க காரணம், மேற்கத்திய காற்று வலுவாக வீசுவதே என கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது.
- தமிழ்
அடுத்த 26 நாட்களுக்கு ‘உஷாரா’ இருங்க.....! –தொடங்கியது கத்திரி வெயில்