இனி வாட்ஸ்அப் வழியாகவும் பணப்பரிமாற்றம் செய்யலாம்!
இந்தியாவில் உள்ள முன்னணி சமூக வலைப்பக்கமான வாட்ஸ்அப் மூலம் கூடிய விரைவில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஃபேஸ்புக் என்ற சமூக வலைதள நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப் மூலம் சாட் செய்வது, வீடியோ கால், ஆடியோ கால் போன்ற வசதிகளே இதுவரையில் வழங்கப்பட்டு வந்தன. கூடிய விரைவில் இந்த ஆப் மூலம் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக வாட்ஸ்அப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுவரையில் இந்தியாவில் ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பீட்டா ரக பணப்பரிமாற்ற வசதியை விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாக உள்ளது. யூபிஐ முறைப்படி இதில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.