மின்கோபுரம் அருகே சென்றால் உடலில் பாய்கிறது மின்சாரம் டெஸ்ட் பண்ணி காட்டிய எம்.பி
ஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக செல்லும் உயர்மின்கோபுரம் அருகே சென்றாலே, நம் உடலில் மின்சாரம் பாய்கிறது என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப் போகிறேன் என்றும் ம.தி.மு.க.வைச் சேர்ந்த கணேசமூர்த்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், ராசிபாளையம் முதல் தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை மின்சாரம் கொண்டு செல்வதற்கு விளைநிலங்்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள், அமைச்சர் என்று பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
சில ஊர்களில் விவசாயிகள், உயர்மின்கோபுரம் அமைக்கவே கூடாது என்று எதிர்க்கின்றனர். சில ஊர்களில் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் 20 மடங்கு இழப்பீட்டுத் தொகை தர வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, அந்த மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தை நேற்றிரவு ஆய்வு செய்தார். அப்ேபாது அவரிடம் அந்த மின்கோபுரத்தின் கீழ் நின்றாலே நம் உடலிலும் சிறிதளவு மின்சாரம் பாய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர் உயர்மின்கோபுரத்தின் கீழ் நின்று, ஒரு மின்சார டெஸ்டரை உடலில் வைத்து பார்த்தார். அப்போது அந்த டெஸ்டரில் லைட் எரிந்தது. எனவே, குறைந்த வோல்டேஜ் மின்சாரம் தனது உடலில் பாய்ந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதன்பின், 2 டியூப் லைட்டுகளை கொண்டு வரச் சொல்லி, அவற்றை அந்த கோபுரம் அருகே கொண்டு சென்றார். அப்போதே அந்த பல்புகள் எரியத் தொடங்கின. பின்னர், இதை புகைப்படம் எடுத்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பப் போகிறேன். இந்த புகைப்படங்களை இணைத்து ஒரு அறிக்கை தயாரித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கவிருக்கிறேன்’’ என்றார்.
'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல