நா ஊரும் உருளை-கத்திரி சட்னி..
நா ஊரும் உருளை கத்திரி சட்னி எப்படி செய்றதுனு பார்க்கலாமா வாங்க..
சமைக்க தேவையானவை
கத்திரிக்காய் – 3உருளைக்கிழங்கு - (சிறியது)கொத்தமல்லி - கைப்பிடி அளவுவெங்காயம், தக்காளி - தலா ஒன்றுபச்சை மிளகாய் - 6 (அல்லது தேவைக்கேற்ப)கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்இஞ்சி - சிறிய துண்டுஎண்ணெய் - 2 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்ப.
உணவு செய்முறை : உருளை கத்திரி சட்னி
ஸ்டெப் 1:
முதலில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின்பு வாணலியில் சிறிதளவு எண்ணெயை விட்டு சூடான பிறகு , நறுக்கிய காய்கள் மற்றும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
ஸ்டெப் 2:
ஆறிய பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்தால்... சூடான உருளை-கத்திரி சட்னி தயார்.