எட்டே வருஷத்தில சீனாவை முந்தப்போறோம்... எதுல தெரியுமா..?
அடுத்த 8 வருடங்களில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடிக்கப் போகிறதாம். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் சீனாவிலோ மக்கள் தொகை அளவு குறைந்து வருவதாகவும் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின் மக்கள் தொகையில் பாதியளவு தான் இந்தியாவின் மக்கள் தொகை இருந்தது. எதிர்காலத்தில் ஏற்படப் போகும் அபாயத்தை உணர்ந்த சீனா தம்பதியருக்கு மகப்பேறு வரி மற்றும் ஏராளமான கட்டுப்பாடுகளையும் அறிவித்து, இன்றைக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்திவிட்டது. ஆனால் இந்தியாவில் இது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசு நினைத்தாலும், அதனை அரசியல்வாதிகள் அரசியலாக்கி விடுவதால் கட்டுப்பாடின்றி மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, 2 குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றால் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு என்ற திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பிரச்சாரம் செய்ய, இந்திரா காந்தி மீது வீண் பழி விழுந்தது. அதன்பின் நாம் இருவர்.. நமக்கு இருவர்.., நாம் இருவர் ... நமக்கொருவர் .. என்ற எத்தனையோ விழிப்புணர்வு பிரச்ச்சாரங்களையும், கோஷங்களையும் அரசுகள் முன் வைத்தாலும், ஜனத்தொகை கட்டுப்பாட்டுக்குள் வராமல் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இந்தியாவில் பெருகி வரும் ஜனத்தொகை குறித்து தற்போது ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் அபாய மணி அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
ஐ.நா.சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை - 2019 என்ற அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் இதோ: தற்பாது உலக மக்கள்தொகை 770 கோடியாக உள்ளது. அதில் சீனாவில் 143 பேரும், இந்தியாவில் 137 கோடிப் பேரும் உள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு மக்கள் தொகை பெருக்கம் 1. 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால் சீனாவிலோ ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் வரும் 2027-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை பின்னுக்கு தள்ளிவிடுமாம்.
இதே போல வரும் 2050-ம் ஆண்டில் உலக மொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2019 மற்றும் 2050-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவில் மக்கள்தொகை 3 கோடி அளவில் குறையும் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் மக்கள் தொகை உயர்வு வழக்கம்போலவே இருக்கும். இதனால் உலக மக்கள் தொகையில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா. எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
சர்க்கரை சேர்க்காமல் பசும்பால் அருந்துங்கள்