8K வீடியோ பதிவு செய்யக்கூடிய மேஜிக்3 போன் அறிமுகம்
48 மெகாபிக்ஸல் ஆற்றலும் சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சாரும் கொண்ட காமிரா மூலம் 8000 பிக்ஸல் தரம் கொண்ட வீடியோவை பதிவு செய்யக்கூடிய நியூபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட் மேஜிக் 3 போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.65 அங்குலம் எஃப்ஹெச்டி; 1080X2340 பிக்ஸல் தரம்; AMOLED வகை;
புத்தாக்க வேகம் 90Hz; பிரகாசம் 430 nits; 2.5 டி கார்னிங் கொரில்லா கிளாஸ்
பிராசஸர்: ஸ்நாப்டிராகன் 855 சிஸ்டம் ஆன் சிப்
இயக்கவேகம்: 8 ஜிபி RAM மற்றும் 12 ஜிபி RAM
சேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி
பின்பக்க காமிரா: 48 எம்பி ஆற்றல்; சோனி ஐஎம்எஸ்586 சென்சார்
முன்பக்க காமிரா: 16 எம்பி தற்பட காமிரா (செல்ஃபி)
பேட்டரி: 5000 mAh
மின்னேற்றம்: 27W வேகம்
ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைப்பதற்கு கருவி, வைஃபை, புளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் இவற்றுடன் 215 கிராம் எடைகொண்டது.
பிளாக் ஷார்க் 2 ஆஸூஸ் ஆர்ஓஜி ஆகிய போன்களுக்கு போட்டியாக விளங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்த போன் ரூ.35,999 (8ஜிபிRAM/128 ஜிபி) மற்றும் ரூ.46,999 (12 ஜிபி RAM/ 256 ஜிபி) விலையில் ஜூன் 27 நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.
ஆண்ட்ராய்டு ஒன்: நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்