டிக் டாக் வீடியோவால் மரணப்படுக்கைக்கு சென்ற இளைஞர்..! கர்நாடகாவில் நடந்த பரிதாப நிகழ்வு

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். இவர் டிக் டாக் செயலியில் தொடர்ந்து சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

நேற்று புதிதாக டிக் டாக் செயலி வீடியோ பதிவிட சினிமாவில் வரும் ஹீரோக்கள் பாணியில் தலைகீழாக குதிக்க முயற்சித்தார். அப்போது தவறுதலாக அவர் கீழே விழுந்ததால்,  கழுத்துப்பகுதி மற்றும் முதுகுத் தண்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நினைவு தப்பிய நிலையில் குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. டிக் டாக் செயலிக்கு தடைவிதிக்க வேண்டும் என கர்நாடகாவில் ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

-தமிழ் 

இளம்பெண்ணின் உயிரை பறித்த டிக் டாக்..! பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறதா டிக் டாக்..?
More News >>