விட்டாச்சு லீவு..! கொண்டாட்டத்தில் ஆந்திரா போலீஸ்

ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார்.

இதற்காக டிஜிபி கௌதம் சவாங் உத்தரவின்படி அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி மொத்தம் 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துகளுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் .

கான்ஸ்டெபுள் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. வார விடுமுறையில் சிப்ட் முறையில் இருக்கும். காவல்துறையில் உள்ள 20 சதவீத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் . மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 300 காலிப்பணியிடங்கள் உள்ளது இது குறித்து எங்கள் கமிட்டி அறிக்கையில் விவாதிக்கப்பட்டது. விசாகப்பட்டினம் ,கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற்றுக் கொண்டோம் .

ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கருத்து கேட்கப்படும். நாளை முதல் ஆந்திர மாநில போலீஸாருக்கு வார விடுமுறை நடைமுறைக்கு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாவோஸ்டுகள், நக்சல்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை தலைமையகத்தில் உள்ள பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்... 

- தமிழ் 

More News >>