சுவையான சில்லி சப்பாத்தி ரெசிபி

சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

பூண்டு - 5

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் -2

வெங்காயம் - 1

குடைமிளகாய் -1

மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில், வழக்கம்போல் சப்பாத்தி செய்து கொள்ளவும். சப்பாத்தி சற்று கனமாக இருந்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.

பின், ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை இதனுடன் சேர்த்து பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமானதும், குடைமிளகாய் சேர்க்கவும்.

அதனுடன், மிளகாய் தூள், கரம் மசாலா, குழம்பு மிளகாய் தூள், தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

வாணலியில், ஏற்கனவே தயார் செய்த சப்பாத்தியை நறுக்கிக்கொண்டு இந்த கலவையுடன் சேர்த்து வதக்கவும்.

இறுதியாக, சுவையான சில்லி சப்பாத்தி ரெடி..!

More News >>