அட்டகாசமான சுவையில் மசாலா சப்பாத்தி ரெசிபி
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மசாலா சப்பாத்தி எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒன்றரை கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
பால் - அரை கப்
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, மேத்தி இலை, கரம் மசாலா, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், அரை கப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
அதன் மீது, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து சுமார் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பிறகு, இதில் இருந்து சிறிய அளவில் பீய்த்து உருண்டைகளாக்கி, வழக்கம் போல் சப்பாத்தி போன்று இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
அட்டகாசமான சுவையில் மசாலா சப்பாத்தி ரெடி..!