குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 3

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய குடை மிளகாய் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

செஷ்வான் மசால் - 5 டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு சப்பாத்தி எடுத்து உருட்டி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தற்போது சப்பாத்தி காண்பதற்கு நூடுல்ஸ் போன்று இருக்கும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பொடியாக நறுக்கிய குடை மிளகாய், செஷ்வான் மசால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.

குடைமிளகாய் வெந்ததும் நறுக்கிய சப்பாத்தி சேர்த்து கிளறவும்.

சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி..!

More News >>