மதுபிரியர்களுக்கு கெட்ட செய்தி சரக்கு விலை உயரப் போகிறது?

குடிகாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் குறையப் போகிறதாம். சரக்கு விலை உயரப் போகிறதாம்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு, சில கடுமையான முடிவுகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறதாம். அதில் ஒன்றுதான். மக்காத பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை ஒழிப்பதில் தீவிரமாக நடவடிக்கை எடுத்தது. பிளாஸ்டிக்கை ஒழிக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கவும், அபராதங்கள் விதிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறாராம்.

அடுத்ததாக, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைவு படுத்தியுள்ளார் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளாராம். அதாவது, இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 9 மணிக்கே மூடலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘‘நேரத்தைத்தான் குறைக்கப் போகிறீங்க, விலையை ஏன் உயர்த்தறீங்க?’’ என்று கோபப்படாதீர்கள். அது எடப்பாடி பழனிச்சாமி அரசு நடவடிக்கை இல்லை. மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை. ஆம். நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வரும் 21ம் தேதியன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், பல்வேறு பொருட்களின் மீதான வரிவிதிப்பு சதவீதம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது மதுபானங்களின் மீது ஜி.எஸ்.டி(சரக்கு மற்றும் சேவை வரி) கிடையாது. மத்திய, மாநில அரசுகளின் கலால் மற்றும் வாட் வரிகள் விதிக்கப்படுகின்றன. தற்போது மதுபானங்கள் மீது 18 சதவீத ஜி.எஸ்.டி வரிவிதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். எனவே, 18 சதவீத வரி விதித்தால், மதுபானங்களின் விலை கடுமையாக உயரலாம் என்று கூறப்படுகிறது. எனினும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வந்து விடாது என்பதால், குடிகாரர்கள் சில மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி..! செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்
More News >>