ராகுல் காந்திக்கு வயது 49 பிரதமர் மோடி வாழ்த்து
இன்று 49-வது பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்த படுதோல்வியால் அக்கட்சி துவண்டு போயுள்ள்ளது எனலாம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற பின் தான் சந்தித்த முதல் பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததால் ராகுல் காந்தியும் உற்சாகம் இழந்துள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்து, தனது முடிவில் பிடிவாதமாகவும் உள்ளார்.
இதனால் மக்களவையிலும் கட்சிக்கு தலைமை ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டார். இப்படிப்பட்ட இறுக்கமான சூழலில், இன்று ராகுல் காந்தியின் 49-வது பிறந்த நாள் எளிமையாக கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் , மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.டி.ஜி.எஸ். பணபரிமாற்றத்திற்கு ஜூலை 1 முதல் கட்டணம் இல்லை