அனைத்து எம்.பி.க்களுக்கும் நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து... பிரதமர் மோடி ஏற்பாடு
பிரதமராக மீண்டும் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் எம்.பி.க்கள் அனைவருக்கும் நாளை நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். இந்த தடபுடல் விருந்தில் பங்கேற்குமாறு கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு சார்பில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த முறை பிரதமராக இருந்த போது எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்தவர் தான் மோடி. மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும், விவாதங்களிலும் பங்கேற்பதிலும் அதிக கவனம் செலுத்தவில்லை என்று பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதே போல் மீடியாக்களையும் பிரதமர் மோடி சட்டை செய்யாமல் இருந்து விமர்சனங்களுக்கு ஆளானதும் உண்டு.
ஆனால் பிரதமராக 2-வது முறை பதவியேற்ற பின் மோடியின் செயல்பாடுகள் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றே கூறலாம். மக்களவைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். கூட்டத் தொடர் தொடங்கிய நாளன்று நாடாளுமன்ற வளாகத்தில் மீடியாக்களை சந்தித்து உரையாடினார். அப்போது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானது. எண்ணிக்கை பற்றி கவலை வேண்டாம். உங்கள் ஆலோசனை தான் பலம். மக்கள் பணிகளை இணைந்து நிறைவேற்றுவோம் என்றெல்லாம் கூறி எதிர்க்கட்சிகளுக்கு ஐஸ் வைத்தார்.
இன்றும் மாலையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினம், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை கேட்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
அடுத்ததாக 17-வது மக்களவைத் தேர்தல் பிறகு, முதன் முறையாக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். குடியரதத் தலைவர் உரை நிகழ்ச்சி முடிந்த பின், இரு அவைகளின் ஒட்டு மொத்த எம்.பி.க்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி விருந்து கொடுக்கிறார். டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான அசோகா ஓட்டலிcc தடபுடலாக விருந்து கொடுத்து எம்.பி.க்களுக்கு உபசரிப்பு நடத்துகிறார் பிரதமர் மோடி. கடந்த முறையை விட இம்முறை பிரதமர் மோடியின் அணுகுமுறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறித்த பேச்சு தான் டெல்லியில் இப்போது பிரதானமானதாக உள்ளது.
28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா?