தென்கொரியாவில் நிலநடுக்கம்: ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பாதிப்பா..?
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றும் வரும் தென் கொரியா நாட்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கடந்த இரண்டு நாள்களாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று பெற்றுவருகின்றன. நாட்டின் முக்கிய நகரான பியோங்சங் பகுதியில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை தென்கொரியா நாட்டில் பியோங்சங் பகுதியில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணர்ப்பட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது.
மிதமான நிலநடுக்கம் உணர்ப்பட்டதால் பொதுமக்களுக்கும் கட்டடங்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இதனால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஏதும் தடைபடவில்லை என்றும் தென்கொரிய ஒலிம்பிக் சங்க நிர்வாகத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மிதமான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.