ஈசியா செய்யலாம் தந்தூரி சிக்கன் ரெசிபி

அசத்தலான சுவையில் தந்தூரி சிக்கன் ஈசியா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ (தொடை கறி)

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

கெட்டியான தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மல்லித்தூள - 1

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

காய்ந்த வெந்தயக் கீரை - அரை டீஸ்பூன்

எலுமிச்சம் பழம் - 1

சோள மாவு - அரை டீஸ்பூன்

வெண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும்.

ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும்.

தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.

சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சுவையான தந்தூரி சிக்கன் ரெடி..!

More News >>