லண்டன் மியூசியத்தில் பிரியங்கா மெழுகு சிலை
லண்டன் மியூசியத்தில் பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சியான மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள மேடம் துஷார்ட்ஸ் மியூசியத்தில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இங்கு பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குலோப் விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட போது அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டது. இதன்பின்பு, இந்த சிலை லண்டன் மியூசியத்திற்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ளவில்லை.
தற்போது இந்த கவர்ச்சி சிலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரசு பணத்தில் ஓட்டல் சாப்பாடு; பிரதமர் மனைவிக்கு அபராதம்