கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம்..! மீன்கள் விலை கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஆகஸ்ட் மாதம் வரை குறைய வாய்ப்பில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவை, சென்னை, திருச்சி, உள்ளிட்ட நகரங்களுக்கு மீன் வரத்து உள்ளது. இந்நிலையில் அங்கு மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் வரத்து 10 டன்களில் இருந்து 4 டன்களாக குறைந்துள்ளதாக கூறுகின்றனர் மீன் வியாபாரிகள். சாலமன் போன்ற ஒரு சில வகை மீன்கள் தமிழக கடலோர பகுதிகளை காட்டிலும் கேரளாவில் அதிகம் கிடைக்கும்.

இதனால் கேரள மீன்களுக்கு என்று சென்னையில் தனி வாடிக்கையாளர்கள் வட்டமே உள்ளது. அதனை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு சென்றால் பார்க்கலாம்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவுற்று இருந்தாலும், இன்னும் மீன்கள் சரியாக கிடைக்கவில்லை என காசிமேடு பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, வஞ்சிரம் மீன் கிலோ ஒன்றுக்கு ரூ.1300, கருப்பு வாவல் ரூ.800, பாறை மீன் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது...

-தமிழ்  

10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம்
More News >>