காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாததற்கு என்ன காரணம்?
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம்.
யோகா குரு ராம்தேவ், மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட்டில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தினம் அன்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அம்மாநில முதல்வர் பட்நாவிஸ் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். இதையொட்டி, மும்பைக்கு வந்துள்ள ராம்தேவ் கூறியதாவது:
நேரு, இந்திரா போன்றவர்கள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ரகசியமாக யோகா செய்தார்கள். யோகா செய்தால் கடவுளின் நேரடி அனுக்கிரகம் கிடைக்கும். அவர்களுக்கு அந்த அனுக்கிரகம் இருந்ததால்தான் அவர்கள் அரசியல் கவுவரம் கிடைத்தது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால், இப்போதுள்ள அவர்களின் வாரிசுகள்(ராகுல், பிரியங்கா காந்தி) யோகா செய்வதில்லை. அதனால்தான், காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியவில்லை.
பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் யோகா செய்கிறார்கள். மக்களுக்கு மத்தியில் வெளிப்படையாக யோகா செய்யும் முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். இப்போது அவரது ஆட்சியில் முத்தலாக், அரசியல் சட்டப்பிரிவு 370 ஆகிய விஷயங்களில்் பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி