எனது அரசியலின் நிறம் கறுப்பு: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் முழக்கம்
"எனது அரசியலின் நிறம் காவியாக இருக்காது. எப்போதும் கறுப்புதான் எனது அரசியல் கொள்கையின் நிறமாக இருக்கும்" என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், "நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் என்பது வேறு. இருவரும் மக்களுக்காவே பணியாற்ற வருகிறோம். அவரது அரசியல் கொள்கை காவியாக இருக்காது என நம்புகிறேன். எனது அரசியல் கொள்கையின் நிறம் எப்போதும் கறுப்பாகவே இருக்கும்.
நேரடி அரசியலில் 2018-ம் ஆண்டிலிருந்து ஈடுபடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனது அரசியல் ஹீரோக்களாக காந்தியும் பெரியாரும் உள்ளனர். அவர்கள் இருவரும் மக்களுக்காக மட்டுமே உழைத்தனர். மக்களுக்காக மட்டுமேத் தவிர தேர்தலுக்காக இவர்கள் அரசியலில் நுழையவில்லை" என்றார்.