நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
மும்பையில் நோ பார்க்கிங் மற்றும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க பெருநகர மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலும் போக்குவரத்து போலீசாரே வாகனங்களை கட்டுப்படுத்தும் பணியில் உள்ளனர். ஆனாலும், அந்த பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோரிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்திருக்கிறது. மாநகராட்சி ஆணையர் பிரவீண் பர்தேஷி இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையை அடுத்த மாதம் 7ம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
நோ பார்க்கிங் ஏரியா, பார்க்கிங் ஒதுக்கப்படாத பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க மாநகராட்சி இந்த திட்டத்தை கொண்டு வருகிறது. இதன்படி, ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாகனங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட பகுதிக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பாக, போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மும்பை பெருநகர நகராட்சி தெரிவித்துள்ளது. இதே போல், தமிழ்நாட்டிலும் பொது மக்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்களிடம் அபராதம் விதித்தால் விதிமீறல்கள் குறையும்.
காயம் குணமாகவில்லை.. உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார் தவான்