145 அடி உயர முருகன் சிலை..! மலேசியாவின் பத்துமலை மிஞ்சும் தமிழகம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கடந்த இரண்டரை வருடமாக இந்த முருகன் திருவுருவ சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திருவுருவச் சிலை அருகே உள்ள மலைக் குன்றில் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் பத்துமலைக் குகை கோயிலின் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவ சிலை அமைக்கப்பட்டது. அதன் உயரம் 108அடி ஆகும் ஆனால் அதைவிட இந்த முருகன் திருவுருவச்சிலை அதிக உயரம் கொண்டதாக நிறுவப்படுகிறது.
மலேசியா பத்துமலை முருகனை தரிசிக்க பல நாடுகளில் இருந்து பக்தர்கள் அங்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதைப்போலவே இந்தியாவில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டன் பாளையத்தில் அமையும் முருகன் சிலையை வழிபடவும், பக்தர்கள் அயல் நாடுகளில் இருந்தும் வர வாய்ப்புள்ளதாக உள்ளூர்காரர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த முருகன் சிலையை மலேசியாவில் வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் குழுவினர் முழுவீச்சில் வடிவமைத்து வருகின்றனர். இது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் வாகனங்களை நிறுத்தி அனைவரும் பார்த்துவிட்டு செல்கின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன் குடும்பத்தினர் சார்பில் இந்த 146 அடி முருகன் சிலை அமைக்கப்படுகிறது....
- தமிழ்
உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை; ஸ்டாலின் உருக்கம்