பள்ளிகளில் யோகா செங்கோட்டையன் தகவல்

பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

உலகில் பல நாடுகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் கோரிக்கையால் இந்த தினம் கொண்டாடப்படுவதால், இந்தியாவில் பல மாநிலங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையான், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியி் கலந்து கொண்டவர்ள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது, யோகா கற்றுத்தர 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக உள்ளதால் விரைவில் நிதி ஒதுக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

More News >>