ஈரான் மீது தாக்குதல் மனம் மாறிய டிரம்ப்
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்ட டொனால்டு டிரம்ப் திடீரென அந்த முடிவை கைவிட்டார்.
ஈரான் அரசு, உலகை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அணு ஆயுதங்களை குறைக்க வேண்டுமென்று அந்நாட்டை அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும், ஈரான் அதிபர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையே மூன்று முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாள் முன்பாக தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்ததாக கூறி, அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதை அந்நாட்டு ராணுவம் அறிவித்த போது, அதை அமெரிக்க கடற்படை மறுத்தது.
ஆனால், அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மைதான் என தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்கு உடனடியாக பதிலடி கொடுக்க டிரம்ப் விரும்பியதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது உடனடியாக போர் தொடங்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஈரான் விவகாரம் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார்.