தெலுங்கானா : தர்ஹாவிற்கு சென்று திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் உள்ள சிலக்கலூரு அருகே லாரி ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சூர்யா பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் இருவரின் நிலைமை கவலைகிடமாக மாறியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள சிந்தபள்ளியை சேர்ந்த 8 பேர் அருகே உள்ள தர்காவிற்கு சென்று வரும் போது விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.