nbspகல்விக்கொள்கை வரைவு அறிக்கையை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்..! கோவையில் 17 மாணவர்கள் கைது

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த கருத்தை ஜூன்மாதம் 30 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற கால அவகாசத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இக்கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், பேருந்து நிலையத்தில் வைத்து கல்விக்கொள்கையின் வரைவு நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி கைது செய்தனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

-தமிழ் 

More News >>