13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! தமிழ்புலிகள் அமைப்பின் நிர்வாகி போக்ஸோவில் கைது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அனித்குமார் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் துடியலூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீஸ், போக்சோ சட்டத்தில் அனித்குமாரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தது.
பாலியல் புகாரில் கைது செய்யபட்டுள்ள அனித்குமார் தமிழ் புலிகள் அமைப்பின் மேட்டுப்பாளையம் நகர செயலாளராக உள்ளார்.