பிரதமருக்கு க்ராண்ட் காலர் விருது: இந்தியாவுக்குக் கவுரவம் என மோடி பெருமிதம்
பாலஸ்தீனத்தின் கவுரவ விருதான 'க்ராண்ட் காலர்' விருதை பிரதமர் மோடிக்கு அந்நாடு வழங்கி கவுரவித்துள்ளது.
பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக பாலஸ்தீனம் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் முதல் நாள் பாலஸ்தீனம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பாலஸ்தீனத்தில் அந்நாட்டு அதிபர் முகமது அப்பாஸைச் சந்தித்த மோடி இரு நாடுகளின் உறவுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மகச்சிறந்த தியாகிகளைக் கொண்ட பாலஸ்தீனம் அமைதி நிலவும் நாடாகத் திகழ வேண்டுமென பிரதமர் மோடி அந்நாட்டில் ஆற்றிய சிறப்புரையில் பேசினார்.
மேலும் பாலஸ்தீனத்தின் சார்பில் வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'க்ராண்ட் காலர்' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தது. இவ்விருது குறித்துப் பிரதமர் மோடி கூறுகையில், "பாலஸ்தீனத்தின் உயரிய விருது இந்தியாவுக்குக் கவுரவம் சேர்ப்பதாக உள்ளது. இரு நாடுகளின் உறவும் மேலும் வலுப்படும்" எனக் கூறினார்.